நாட்டில் பெய்து வரும் தொடர் பலத்த மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கையும், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட (அம்பர்) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் குறித்த அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் விழிப்புடன் செயற்படுமாறும், அவசியமாயின் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் காவல்துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக