BREAKING
2027 வரவு செலவுத் திட்ட யோசனை; ஜனாதிபதியின் பார்வைக்கு! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்ப்பு ஒத்திவைப்பு மரண தண்டனையை தவிர வேறு வழிகள் இல்லை; ஷேக் ஹசீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு! திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்! இலங்கை போக்குவரத்தில் புதிய அத்தியாயம்; passenger drone சேவை 2027 வரவு செலவுத் திட்ட யோசனை; ஜனாதிபதியின் பார்வைக்கு! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்ப்பு ஒத்திவைப்பு மரண தண்டனையை தவிர வேறு வழிகள் இல்லை; ஷேக் ஹசீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு! திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்! இலங்கை போக்குவரத்தில் புதிய அத்தியாயம்; passenger drone சேவை

இலங்கை போக்குவரத்தில் புதிய அத்தியாயம்; சேவை

இலங்கை போக்குவரத்தில் புதிய அத்தியாயம்; சேவை

 இலங்கை போக்குவரத்தில் புதிய அத்தியாயமாக passenger drone சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கையில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தியோபூர்வ சோதனை முன்னெடுப்பு இன்று (11) கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடத்தப்பட்டது.

இதற்காக, சீன நிறுவனமான EHang தயாரித்த eVTOL வகை பயணிகள் ட்ரோன் பயன்படுத்தப்பட்டன. சாதாரண விமானங்களைப் போல ஓடுபாதையின்றி, இந்த ட்ரோன் செங்குத்தாகப் புறப்பட்டு தரையிறங்கும் திறன் கொண்டது.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு வணிகச் சேவையாக அல்லாமல், ஒரு சோதனைத் திட்டமாகவே செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு துறைமுக நகரத்தைச் சுற்றி சுமார் ஆறு மாதங்களுக்கு சோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இதற்காக, இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய E216 வகை ட்ரோனும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்ட இந்த ட்ரோன் ஒரு கணினி அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

அனர்த்தம் அல்லது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால், தானாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனையும் இது கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ள்ன.

எதிர்காலத்தில் இந்தச் சேவை வணிக அளவில் செயல்படுத்தப்பட்டால், சிகிரியா, பிதுரங்கல மற்றும் தீவுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளையும் இது உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"