BREAKING
சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிக்குகள் ! அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள 3 சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை ஊழியருடன் தகராறு ; நபர் ஒருவர் அடித்துக் கொலை அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிக்குகள் ! அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள 3 சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை ஊழியருடன் தகராறு ; நபர் ஒருவர் அடித்துக் கொலை அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு

அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை

அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை

அம்பாறை பொது மருத்துவமனை சவக்கிடங்கில் உறவினர்கள் உரிமை கோராது உள்ள மூன்று ஆண்களின் உடல்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்காக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனினும் பல மாதங்கள் கடந்தும் இவர்களது உட உரிமை கோர எந்தவொரு உறவினர்களும் இதுவரை முன்வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் நபர்:பெயர்: U. D. பெர்னாண்டோ (முகவரி வழங்கப்படவில்லை)அனுமதிக்கப்பட்ட திகதி: மார்ச் 29, 2026 இறந்த திகதி: மார்ச் 31, 2026,

இரண்டாம் நபர்:பெயர்: விஜேரத்ன (முகவரி வழங்கப்படவில்லை)அனுமதிக்கப்பட்ட திகதி: ஜூன் 24, 2026 இறந்த திகதி: ஜூன் 25, 2026,

மூன்றாம் நபர்:பெயர்: அடையாளம் காணப்படவில்லை அனுமதிக்கப்பட்ட திகதி: ஆகஸ்ட் 10, 2026 இறந்த திகதி: அக்டோபர் 24, 2026 என பொலிஸார் கூரியுள்ளனர்.

இன்னிலையில் இறந்தவர்களை அடையாளம் காணவோ அல்லது அவர்களின் உறவினர்களைக் கண்டறியவோ உதவும் தகவல்கள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் பின்வரும் எண்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர்: 071-8591148அம்பாறை பொலிஸ் நிலையம்: 063-2222222இத்தகவலை ஊடக நிறுவனங்களும் பொதுமக்களும் பரப்பி உதவுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"