BREAKING

ராகு - கேது பெயர்ச்சி ; உச்சத்திற்கு செல்லும் ராசிகள் இவைதான்

ராகு - கேது பெயர்ச்சி ; உச்சத்திற்கு செல்லும் ராசிகள் இவைதான்

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு, ஒன்பதாம் இடத்துக்கு கேது வரக்கூடிய பெயர்ச்சி இது. சோம்பலை விரட்டிவிட்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுபிட்சங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுவது அவசியம். அயல்நாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரலாம். பொறுப்புகளை திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செய்வது அவசியம். மேலிடத்து ஆதரவு அதிகரிக்கும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை தவிர்க்காமல் கேளுங்கள். உழைக்கத் தயங்காமல் இருந்தாலே உங்கள் முன்னேற்றம் முடுக்கிவிடப்படும், உணர்ந்து செயல்படுங்கள். இல்லத்தில் இன்சொல்பேசினால் இனிமை இடம்பிடிக்கும். இந்த சமயத்தில் உறவோ நட்போ உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். வாரிசுகள் வாழ்க்கையில் வசந்தம் வரும். சுபகாரியத் தடைகள் விட்டுக் கொடுத்தால் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் ஆதாயம் வரும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்திற்கு ராகுவும், ஆறாம் இடத்துக்குக் கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சி இது. எந்த சமயத்திலும் முழுமையான முயற்சியும் அமைதியான செயல்களும் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகளுக்கு உரிய உயர்வு கிட்டும். புதிய பணிவாய்ப்பு மனம்போல அமையும். எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கைகூடும். இந்த சமயத்தில், உடனிருப்போர் செயல்களால் உணர்ச்சிவசப்படுவதும் பிறரைக் குறைசொல்வதும் வேண்டாம். மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதும் கூடாது. குதர்க்கமும் குத்திக்காட்டலும் தவிர்த்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோர், பெரியோர் ஆசி கிட்டும். குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வரும். பணவரவு சீராகும். சுப காரியங்களில் நிதானம் முக்கியம். தனவரவு கைகூடும். ரத்த பந்தங்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதே நல்லது. வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். அசையும் அசையா பொருள் வாங்குதல் விற்றலில் கவனம் முக்கியம்.

உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்துக்கு ராகுவும், ஐந்தாம் இடத்துக்குக் கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சி இது. இந்தக் காலகட்டத்தில் வீண் சலிப்பு தவிர்த்து பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், நிம்மதி நிலைக்கும். அலுவலகத்தில் உயர்வுகள் உற்சாகம் தரும். அதேசமயம், வீண் தர்க்கம் தவிர்ப்பதும், திட்டமிடலும் நேரம்தவறாமையும் மிகமிக அவசியம். பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான கோப்புகளை உரிய அனுமதிபெற்று நகல் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அவசரத்தினால் கோப்புகளைக் கைமாற்றி வைக்க நேரிடலாம், கவனம் முக்கியம். அலுவலகத்தில் வலைதள கேளிக்கை உலாவல்களை அறவே தவிருங்கள். குடும்பத்தில் வீண் ரோஷமும் விதண்டாவாதமும் கூடவே கூடாது. தர்க்கம் தவிர்த்தால், குதூகலம் கூடும். . வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வரவைப் போலவே செலவும் சேர்ந்து வரும், ஆடம்பரம் தவிர்த்து அசையாத சொத்தாகவோ சுபச்செலவாகவோ ஆக்குவது புத்திசாலித்தனம். வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வைத்திருங்கள்.. சுபகாரியங்களை அவசரமில்லாமல் முழுமையாகத் திட்டமிட்டுச் செய்யுங்கள்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"