BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி ; அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய தகவல்கள்

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி ; அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய தகவல்கள்

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் காலி, கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயின்று வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி காலை 7.30 மணியளவில் குறித்த மாணவியின் சடலம் புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணையின்போது, அம்மாணவி அண்மைக்காலமாக அதிகமான கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டிருந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த மாணவியின் தந்தை மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சியமளிக்கையில், தனது மகள் உயர்தரப் பரீட்சையில் மூன்றாவது முறையாகத் தோற்றி மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியிருந்ததாகவும், தற்போது நான்காம் ஆண்டில் கல்வி பயின்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருதரப்பினரின் விருப்பத்துடன் திருமணப் பதிவு செய்துகொண்ட நிலையில், குடும்பத்தில் எவ்விதமான பிரச்சினைகளும் இருக்கவில்லை எனவும் தந்தை சாட்சியமளித்துள்ளார்.

எனினும், அதிகமான கல்வி மற்றும் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக அண்மையில் தனது தாயாரிடமும் கணவரிடமும் அவர் தெரிவித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு முந்தைய தினம் தனது குடும்பத்தினருக்கு அவர் அனுப்பியிருந்த சில குறுஞ்செய்திகள் தொடர்பான தகவல்களும் மரண விசாரணையின்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. பின்னர் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போதே அவரது உயிரிழப்பு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் தொடர்புடைய சம்பவமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் அவதானிக்கப்பட்ட போதிலும், சம்பவத்தை நேரடியாகக் கண்ட புகையிரத சாரதிகள் எவரும் இல்லாததால் உயிரிழப்புக்கான சூழ்நிலையை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"