BREAKING
2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள் Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள் Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு

ஐரோப்பாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அச்சுறுத்தல்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

ஐரோப்பாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அச்சுறுத்தல்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​

ஐரோப்பாவில் நேற்று(வியாழன்) மட்டும் சுமார் 20 பயணிகள் விமானங்களுக்கு மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்து குவிந்தன. ரோம், சோபியா, பிராக் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களின் அதிகாரிகளுக்கு இந்த மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப்படை போர் விமானங்கள் உடனடியாக வான்வெளிக்கு விரைந்தன.​

டப்ளினில் இருந்து ரோம் நோக்கிச் சென்ற 'ஏர் லிங்கஸ்' விமானத்தை பிரான்ஸ் போர் விமானங்கள் சுற்றிவளைத்து எவ்ரூ இராணுவ தளத்தில் அவசரமாக தரையிறக்கின.

இதேபோல், சோபியா நோக்கிச் சென்ற 3 ரயான்ஏர் விமானங்களை பல்கேரிய போர் விமானங்கள் இடைமறித்து பத்திரமாக வழிநடத்திச் சென்று தரையிறக்கின. பல விமானங்கள் பாதைகள் மாற்றப்பட்டு அருகிலுள்ள பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

தரையிறக்கப்பட்ட அனைத்து விமானங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் எந்தவொரு வெடிபொருளும் சிக்கவில்லை எனவும், இது வெறும் புரளி எனவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனால் நடுக்கடலிலும் வானிலும் மரண பயத்தில் தவித்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில்களில் 'மேல் ஸ்டேட்' என்ற அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஷ்யாவில் செயல்பட்டு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இதற்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், தீவிர விசாரணை நடந்து வருகிறது.   

   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"