BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

ரூ. பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல்

ரூ. பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல்

 இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, 190 பில்லியன் ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதராகம இன்று (05) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் முதலாம் மற்றும் எட்டாம் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த இருவருக்கும் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், விசாரணைக்கு அவசியமான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கு அடித்தளமிட்டதற்கும் பங்களித்த நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோசடியில் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரு சந்தேகநபர்களினதும் பிணை மனு தொடர்பான தீர்மானம் நவம்பர் 12ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிவான் தெரிவித்ததையடுத்து, இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"