கிளிநொச்சி கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நெடுங்கேணி, பெரியமடு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.
தனது வீட்டின் பின்புறமுள்ள வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோதே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில்,புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக