கைது செய்யப்பட்ட இருவரும் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் சீன நாட்டைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவர், 2,000 அமெரிக்க டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின்போது, குறித்த பண மோசடி சம்பவம் தொடர்பாக வியட்நாம் நாட்டவர்கள் நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்த அறைக்குள் அடைத்து வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நால்வரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான நான்கு வியட்நாம் நாட்டவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷன் சூரியபண்டாரவின் ஆலோசனைக்கு அமைய, வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக