BREAKING
சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா! பூநகரியில் மாவீரர் தின நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் திருமணம் முடிந்த அடுத்த நாளே குழந்தை பெற்ற புதுமண பெண் ; மாப்பிள்ளை ஷாக் ! தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா! பூநகரியில் மாவீரர் தின நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் திருமணம் முடிந்த அடுத்த நாளே குழந்தை பெற்ற புதுமண பெண் ; மாப்பிள்ளை ஷாக் ! தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்குப் புதிய மண்சர்வு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (07) இரவு 7:00 மணி முதல் நாளை (08) இரவு 7:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.

நிலவும் மழைடனான வானிலை காரணமாகப் பல பிரதேசங்களுக்கு இரண்டு மட்டங்களிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டம்: பசறை பிரதேசம் கேகாலை மாவட்டம்: மாவத்தகம மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்கள்

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்: உடுதும்பரை

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட மற்றும் கேகாலை

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எஹெலியகொடை, அயகம, வெலிகேபொல மற்றும் குருவிட்ட குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவசர மண்சரவு நிலைமைகள் அல்லது மண்மேடுகள் சரிந்து விழுவது தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"