BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

செப்டம்பர் 30ஆம் திகதி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்தச் சம்பவத்தில், விமானத்தின் துணை விமானி பிரதான விமானியை தாக்கியதாகவும், இதன் பின்னர் விமானம் வேகமாக உயரத்தை இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தலையிட்டு துணை விமானியை கட்டுப்படுத்தியதாகவும், பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இது திட்டமிடப்பட்ட “False Flag” நடவடிக்கையாக இருக்கலாம் என்றும், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்கில் மொசாட் இதன் பின்னணியில் இருந்திருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும், விமானம் குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தை இழந்தமை, விமானத்தின் பாதுகாப்பு நடைமுறைகள், துணை விமானியின் பின்னணி மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இத்தகைய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் மட்டுமே இந்தச் சம்பவத்துக்கும் மொசாட் அமைப்புக்கும் இடையிலான தொடர்பை நிரூபிப்பதில்லை.

மொசாட் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உறுதியான ஆதாரம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவத்துக்கு பயங்கரவாதத் தொடர்பு அல்லது முன்கூட்டிய திட்டமிடல் இருந்ததா என்பதையும் விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, துணை விமானியின் முந்தைய பின்னணி, பணிநியமன நடைமுறைகள் மற்றும் விமானப் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் முடிவுகளிலேயே சம்பவத்துக்கான உண்மையான காரணம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"