BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை

வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை

எர்ணாகுளத்தில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் வெளியான ஸ்பா மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அதில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2ஆம் திகதி காலை நடைபெற்ற நேர்காணலில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது அவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதே குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், பணி தொடர்பான சந்திப்பு எனக் கூறி, அன்று மாலை இடப்பள்ளியில் உள்ள விடுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு மற்ற ஊழியர்களும் இருப்பார்கள் என்றும், சந்திப்பின் ஒரு பகுதியாக அவருக்கு புடவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதிக்கு சென்ற பின்னர், அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாகவும், அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் சுயநினைவை இழந்த நிலையில், அக்டோபர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடுமையான அதிர்ச்சி காரணமாக உடனடியாக பொலிஸில் புகார் அளிக்க அவர் தயங்கியதாகவும், அவரது தோழி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கொச்சி மாநகர பொலிஸ் ஆணையாளர் காளிராஜ் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை காரணமாக அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெண் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீராஜ் (30), ஜித்து (27) ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையில், வயநாட்டைச் சேர்ந்த அம்மு எனப்படும் சரண்யா மற்றும் சஞ்சு ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்துச் செல்வதில் சரண்யா முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் தப்பிச் செல்ல முயன்றபோது சஞ்சு அவரை தடுத்து நிறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீராஜ் கொச்சியில் நான்கு ஸ்பா மையங்களை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், இந்தக் குழுவுக்கு பணம் பறிக்கும் கும்பல்கள், குற்றக் குழுக்கள் அல்லது பாலியல் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"