BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தின் தேவைக்காக கட்டப்பட்டு இடை நடுவில் நிறுத்தப்பட்ட இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்கள் தற்போது மிக வேகமாக இடம்பெற்று வருகிறது.

தனியாருக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் காணியில் இராணுவ தேவைக்காக குறித்த வைத்தியசாலை கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சிக் காலங்களில் குறித்த இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் மக்களின் எதிர்ப்பு காரணமாக சில காலம் கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வந்த பின்னர் மக்களின் காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் குறித்த இராணுவ வைத்திய சாலையின் மேல் தள வேலைகள் முடிவுறுத்தப்பட்டு கூரை அமைக்கும் வேலைகள் வேகமாக இடம்பெற்று வருகிறது

அப்பாகுதி மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலையின் கட்டுமானங்கள் வேகமாக இடம்பெற்று வருகிறது.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த ராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்களை நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் குறித்த வைத்தியசாலையின் கட்டுமானங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

அதேவேளை குறித்த கட்டுமான பணிகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் அண்மையில் ஊடக சந்திப்பொன்றின் போது , கேள்வி எழுப்பிய வேளை , இராணுவத்தினர் வைத்தியசாலையை கட்டினாலும் , அவற்றை அரசாங்கம் விடுவிக்கும் போது , வைத்தியசாலையும் விடுவிக்கப்பட்டு , மக்கள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.

தனியார் காணியில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்படும் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டாலும் , அதனை எவ்வாறு மக்கள் பாவனைக்கு கையளிக்க முடியும் ? அது அந்த காணி உரிமையாளர்களிடம் தானே சென்றடையும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"