BREAKING
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள்

மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக, பொதுமக்கள் குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐந்து வீட்டுத்திட்டப் பகுதியில் உள்ள குறித்த பொதுக் கிணற்றில் வறட்சியிலும் நீர் வற்றாமல் காணப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த பல குடும்பங்கள் தமது அன்றாட நீர்த் தேவைகளுக்காக அந்தக் கிணற்று நீரையே நம்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அடையாளம் தெரியாதவர்களால் கிணற்றுக்குள் இறந்த நாய் வீசப்பட்டதைத் தொடர்ந்து, கிணற்று நீர் மாசடைந்துள்ளதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் சுகாதாரத் திணைக்களத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்து, கிணற்றை உடனடியாக சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குறித்த கோரிக்கையின் பிரதிகள் மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கிளிநகர் கிராம அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், முறைப்பாடு மற்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனிடையே, கிணற்றுக்குள் வீசப்பட்ட நாய் தற்போது அழுகி கரைந்து போயுள்ளதாகவும், இதனால் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வறட்சிக்கு மத்தியில் தங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய பொதுக் கிணறு மாசடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கிணற்றை சுத்தம் செய்து, நீரை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"