BREAKING
பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார் இரவு நேரத்தில் உத்தரகாண்டை உலுக்கிய நிலநடுக்கம் பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது! 3 வாரங்களில் முழுமையான தயார்நிலையை எட்ட ஜனாதிபதி பணிப்புரை யாழ்.கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க மாட்டோம் ; இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம் பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார் இரவு நேரத்தில் உத்தரகாண்டை உலுக்கிய நிலநடுக்கம் பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது! 3 வாரங்களில் முழுமையான தயார்நிலையை எட்ட ஜனாதிபதி பணிப்புரை யாழ்.கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க மாட்டோம் ; இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்

பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பேருந்தில் பெண் ஒருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தனது தாலிக்கொடியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அதனை தனது தோளில் தொங்கவிட்டிருந்த கைப்பைக்குள் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து அவர் தனது கைப்பையைத் திறந்து தொலைபேசியை எடுத்துப் பேசியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் பயணிகள் நெரிசலாக இருந்ததுடன், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நெருக்கமாகப் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது, குறித்த பெண்ணுக்கு அருகில் நின்றிருந்ததாகக் கூறப்படும் மற்றொரு பெண், அவரது கைப்பையை அவதானித்து, அதற்குள் இருந்த தாலிக்கொடியை திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் தங்களது நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை மிகவும் அவதானமாகப் பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"