திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர், சிறைச்சாலை வளாகத்திலேயே கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக