BREAKING
சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கையூட்டல் குற்றச்சாட்டில் கைது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம் இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கையூட்டல் குற்றச்சாட்டில் கைது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம் இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 6 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதையும், பாரிய குற்றங்களுக்கு எதிரான இலங்கையின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ், பாரிய குற்றமொன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றில் உறுப்பினராக இருப்பது குற்றமாகக் கருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக 5 முதல் 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரே தடவையில் இரண்டு மாதங்கள் வரையான தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிக்கவும், மொத்தமாக ஒரு வருடம் வரை ஒருவரைத் தடுப்புக் காவலில் வைக்கவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியுடன் டிஜிட்டல் கண்காணிப்பு, தகவல் தொடர்புகளை இடைமறித்தல், இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் மின்னணு சாதனங்களில் இருந்து தரவுகளைப் பெறுதல் உள்ளிட்ட அதிகாரங்களும் காவல்துறையினருக்கு வழங்கப்படுகின்றன.

அத்துடன், பாரிய குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவதற்கும், குறிப்பிட்ட தகவல்களை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், பாரிய குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவதற்கும், குறிப்பிட்ட தகவல்களை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"