புத்தளம் - கற்பிட்டி, இலந்தையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (29) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர் மஞ்சள், ஏலக்காய் மற்றும் சங்குகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலந்தையடி கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றிலிருந்து 138 கிலோகிராம் உலர் மஞ்சள் துண்டுகள், 80 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 370 சங்குகள் என்பன கண்டெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த பொருட்களை கைவிட்டுச் சென்றவர்கள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக