BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்

தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 07 பகுதியில், 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 38 வயதுடைய நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை(29) காலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கையின்போது குறித்த நபரிடமிருந்து 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"