BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

இலங்கையில் வருடத்தின் இதுவரையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு

இலங்கையில் வருடத்தின் இதுவரையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை 14 (T-56) ரக துப்பாக்கிகள், 33 கைத்துப்பாக்கிகள் மற்றும் 25 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 891 துப்பாக்கிகள் பொலிஸ் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் மூலம் 74 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 2,404 துப்பாக்கிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட மொத்தம் 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"