BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு

பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு

காலி - பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'லொகு பெட்டி' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் தனது தாயாருடன் பயணித்த வாடகைத் முச்சக்கர வண்டியை இலக்கு வைத்து பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து காரில் வந்த குழுவினர் T-56 ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வாடகைத் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், குறித்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததுடன், அவரது தாயாரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.

அவர் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குத் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"