BREAKING
வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு

தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.

தம்மை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளுமாறும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியை வகிப்பதையும், நிமால் சிறிபால டி சில்வா கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். எனினும், குறித்த கோரிக்கைகளை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக நிராகரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, தாம் கோரிய நிவாரணங்களை வழங்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிமால் சிறிபால டி சில்வா கட்சித் தலைவராகப் பணியாற்றுவதையும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியின் பணிகளை மேற்கொள்வதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

அத்துடன், குறித்த வழக்கின் முதன்மை விசாரணை 2027 ஜனவரி 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"