BREAKING
ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு தென்னிலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிசூடு ; ஒருவர் காயம் ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு தென்னிலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிசூடு ; ஒருவர் காயம்

தகாத தொடர்பால் கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை; வெளிவரும் பகீர் தகவல்!

தகாத தொடர்பால் கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை; வெளிவரும் பகீர் தகவல்!

தென்னிலங்கையின் பத்தேகம – ஹல்பேதொட்ட பகுதியில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான நீண்டகால மோதலும் பழிவாங்கும் நடவடிக்கையும் இருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் விசாரணைகளின்படி, கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண், லொக்கு பெட்டி எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீண்டகால சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையாகியிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வந்துள்ளார்.

அவ்வாறு முன்னிலையாகிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கரந்தெனிய சுத்தா மற்றும் லொக்கு பெட்டி தரப்பினருக்கு இடையிலான நீண்டகால மோதலே இந்தக் கொலைக்கான பின்னணியாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் லொக்கு பெட்டி தரப்பினரால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) காலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, எல்பிட்டிய வலய குற்ற விசாணைப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கைதான சந்தேகநபர்கள் 22 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட கஹவத்த, பல்லேபெத்த மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"