BREAKING
2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை படிக்க சென்ற இடத்தில் பறிபோன உயிர்; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் 2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை படிக்க சென்ற இடத்தில் பறிபோன உயிர்; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர்

யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

பௌர்ணமி தினமான நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பெருந்தொகையான மதுபானங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனை நடைபெறுவதாகப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5,000 லீட்டர் மதுபானம் மற்றும் 2,500 லீட்டர் பீயர் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானங்களும், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"