BREAKING
எவ்வித எல்லையுமின்றி தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; தென்னிந்திய திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல் கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; நாளை முதல் சேவையில் மெட்ரோ பஸ்கள் பொலிஸாரால் அகற்றப்பட்ட திலீபன் சிலை ; போராட்டத்தில் குதித்த யாழ் மக்கள் அடுத்த 36 மணித்தியாலங்களில் காத்திருக்கும் கனமழை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் எவ்வித எல்லையுமின்றி தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; தென்னிந்திய திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல் கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; நாளை முதல் சேவையில் மெட்ரோ பஸ்கள் பொலிஸாரால் அகற்றப்பட்ட திலீபன் சிலை ; போராட்டத்தில் குதித்த யாழ் மக்கள் அடுத்த 36 மணித்தியாலங்களில் காத்திருக்கும் கனமழை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

எவ்வித எல்லையுமின்றி தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

எவ்வித எல்லையுமின்றி தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஊழல்வாதிகளுக்குத் எவ்வித எல்லையுமின்றி தண்டனை வழங்கப்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் உதவியைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி,

"திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதில் எந்த எல்லைகளும் இல்லை. இந்தத் தடவை எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகளிலும் செய்வோம். அடுத்த தடவையும் பிடிப்போம். இவை பெரிய அளவிலான விசாரணைகள் என்பதால் சர்வதேசத்தின் உதவி தேவைப்படுகிறது, இதனால் தாமதமாகிறது. எங்களுக்கு எந்த விதத்திலும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது.

நான் நேர்மையாகச் சொல்கிறேன், எவரிடமிருந்தும் பழிவாங்கும் நோக்கம் நமக்கு இல்லை. நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? அவர்களைப் போல எங்களுக்குக் காணி வழக்குகளோ, குடும்பத் தகராறுகளோ இல்லை.

தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இவை எதுவுமே பழிவாங்கல் கிடையாது. பழிவாங்கும் வரலாறு எப்படிப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியும் என அவர் தெரிவித்தார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"