BREAKING
யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி படகு சேவை சீரற்ற வானிலை ; வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பேருந்து நிலையம் லங்கா சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு 95 மேலதிக வாக்குகளால் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் ; சபாநாயகர் சான்றுரை யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி படகு சேவை சீரற்ற வானிலை ; வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பேருந்து நிலையம் லங்கா சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு 95 மேலதிக வாக்குகளால் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் ; சபாநாயகர் சான்றுரை

சீரற்ற வானிலை ; வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பேருந்து நிலையம்

சீரற்ற வானிலை ; வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பேருந்து நிலையம்

நிலவும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் இன்று (25) பிற்பகலில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

பஸ் நிலையத்தின் வடிகான் தொகுதி அடைபட்டு மழைநீர் பஸ் நிலையத்தின் ஊடாகப் பாய்ந்ததே இதற்குக் காரணம் என அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பஸ் நிலையம் நீரில் மூழ்கியதால் பயணிகள் மட்டுமன்றி பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"