BREAKING
யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி படகு சேவை சீரற்ற வானிலை ; வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பேருந்து நிலையம் லங்கா சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு 95 மேலதிக வாக்குகளால் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் ; சபாநாயகர் சான்றுரை யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி படகு சேவை சீரற்ற வானிலை ; வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பேருந்து நிலையம் லங்கா சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு 95 மேலதிக வாக்குகளால் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் ; சபாநாயகர் சான்றுரை

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தினால் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்பு நாளை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருகிறது.

அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 319 ரூபாயிலிருந்து 309 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 249 ரூபாயிலிருந்து 245 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 244 ரூபாயிலிருந்து 242 ரூபாயாகவும், கோதுமை மாவின் விலை 179 ரூபாயிலிருந்து 174 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 174 ரூபாயிலிருந்து 173 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 179 ரூபாயிலிருந்து 174 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"