BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு

கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து அகற்றி, சம்பவ இடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விபத்தை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்த நிலையில், அவர்களில் சிலர் விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் வாகனத்தை தாக்கி தீ வைக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கார், 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"