சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.
இருப்பினும், அவர்களின் சமிக்ஞையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுள்ளன.
இதனையடுத்து, அதிரடிப்படையினர் குறித்த டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இரு டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தி வந்த சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக