சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்ப முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்குச் சபாநாயகர் வாய்ப்பளிக்காமலும், அதற்குத் இடையூறு ஏற்படுத்தியமையையும் அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்திகள்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக