பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே ஜனக நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக