இலங்கையின் கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நண்பகல் கழிவறையில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை அங்கு விட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 30 வயதுடைய பெண் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணே அன்றைய தினம் குழந்தையை பிரசவித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசவத்துக்குப் பின்னர் பச்சிளம் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து செல்ல அவர் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக அந்தப் பெண்ணை பிடித்ததுடன், குழந்தையையும் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணும் பச்சிளம் குழந்தையும் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்களின் தகவலின்படி, குழந்தை தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக