அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்ற தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
2025.12.11 அன்று, குறித்த சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக
அவளது சொந்த தந்தை உட்பட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சம்மாந்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற கடந்த தவணையின் போது,
தந்தையை தவிர மற்ற 4 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்த சந்தர்ப்பத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி 4 பேரையும் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி பாதுகாப்பு கருதி வெளி மாவட்டத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தலைமறைவாக இருந்த 3 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக,
வொலிவேரியன் கிராமத்தில் வைத்து இறுதியாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கல்முனை குடி பகுதியை பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்,
இன்று முகம் மறைக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது,
எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிவான்,
வழக்கை மறு தவணைக்கு ஒத்திவைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்த பெயர்கள்,
ஊர்களில் பயன்படுத்தப்படும் பட்டப்பெயர்கள் மற்றும் அழைப்புப் பெயர்களாக இருந்ததால்,
மீதமுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காணுவதில் காலதாமதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக