BREAKING
Surya–Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படங்கள் சூரியன்–புதன் சேர்க்கை 2026: புதாதித்ய ராஜயோகத்தால் சாதக மாற்றம் பெறும் 4 ராசிகள்! மிருணாளினி ரவியின் காதல் அறிவிப்பு; மஹாவிஷ்ணுவுடன் வைரலாகும் புகைப்படங்கள் ஊட்டியில் சிவகார்த்திகேயன்; மனைவி ஆர்த்தியுடன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல் பெண் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை; மாணவர்கள் முன்னிலையில் அதிர்ச்சி சம்பவம் – காணொளி வைரல் Surya–Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படங்கள் சூரியன்–புதன் சேர்க்கை 2026: புதாதித்ய ராஜயோகத்தால் சாதக மாற்றம் பெறும் 4 ராசிகள்! மிருணாளினி ரவியின் காதல் அறிவிப்பு; மஹாவிஷ்ணுவுடன் வைரலாகும் புகைப்படங்கள் ஊட்டியில் சிவகார்த்திகேயன்; மனைவி ஆர்த்தியுடன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல் பெண் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை; மாணவர்கள் முன்னிலையில் அதிர்ச்சி சம்பவம் – காணொளி வைரல்

: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்

: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நட்சத்திர தம்பதிகளில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுக்கும் தனி இடம் உள்ளது. திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடியின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு முன்பு ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த சூர்யா–ஜோதிகா ஜோடி, தங்களின் இயல்பான நடிப்பு மற்றும் சிறப்பான கெமிஸ்ட்ரி மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் திரைப்படங்களில் இணைந்து நடிக்கவில்லை. இதனால், சூர்யா–ஜோதிகா மீண்டும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ள இருவரும், தங்களுக்கு பொருத்தமான கதையும் கதாபாத்திரங்களும் அமைந்தால் மீண்டும் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து பிரபல இதழின் அட்டைப்படத்திற்காக ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

இந்த போட்டோஷூட்டில் இருவரும் மிகவும் ஸ்டைலிஷாகவும், காதல் நிறைந்த தோற்றத்திலும் காட்சியளித்துள்ளனர். வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் பழைய நினைவுகளை மீண்டும் கிளறியுள்ள நிலையில், “சூர்யா–ஜோதிகா மீண்டும் எப்போது திரையில் ஒன்றாக நடிப்பார்கள்?” என்ற எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"