BREAKING
ஆந்திராவிலும் பாமக தொடக்கம்; 2031-ல் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வாய்ப்பு தருவதாக கூறி “அட்ஜெஸ்ட்மென்ட்” கேட்டார்கள்; அய்யனார் துணை நடிகை ரேஷ்மா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தினமும் எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? 7 நாட்களில் ரூ.245 கோடியை கடந்த ஜனநாயகன் வசூல்; 7வது நாளில் கணிசமான சரிவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆந்திராவிலும் பாமக தொடக்கம்; 2031-ல் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வாய்ப்பு தருவதாக கூறி “அட்ஜெஸ்ட்மென்ட்” கேட்டார்கள்; அய்யனார் துணை நடிகை ரேஷ்மா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தினமும் எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? 7 நாட்களில் ரூ.245 கோடியை கடந்த ஜனநாயகன் வசூல்; 7வது நாளில் கணிசமான சரிவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கொழும்பு நாரஹேன்பிட்டியில் கோடிக்கணக்கில் திருட்டு : பெண் ஒருவர் உட்பட பேர் கைது

கொழும்பு நாரஹேன்பிட்டியில் கோடிக்கணக்கில் திருட்டு : பெண் ஒருவர் உட்பட பேர் கைது

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் தொடர்ச்சியாக,

நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பகுதியில்,

11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,

திருடப்பட்ட தங்க நெக்லஸ்

உடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்குட்படுத்திய போது,

திருடப்பட்ட சொத்துகளை அப்புறப்படுத்தியமை மற்றும் அவற்றை வைத்திருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியதை அடுத்து,

பெண் ஒருவர் உட்பட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து,

ரூ. 62 இலட்சம் பெறுமதியுள்ள 03 கைக்கடிகாரங்கள்,

ஒரு ஜோடி தங்க காதணிகள்,

ரூ. 02 மில்லியன் பெறுமதியுள்ள வைர நெக்லஸ்,

02 வாசனை திரவிய போத்தல்கள்

என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண் சந்தேக நபர்கள் : 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்

பெண் சந்தேக நபர் : 29 வயது

அனைவரும் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"