BREAKING
நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளதுடன், ஆரம்ப சட்ட வரைவை தொழில் திணைக்களம் தயாரித்துள்ளது.

இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த சட்டத் திருத்தங்களின் மூலம், ஊழியர் சேமலாப நிதி திட்டத்தின் சட்ட அடித்தளத்தை மேம்படுத்துவதோடு, தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்துவதே நோக்கமாகும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"