BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; போதை மாத்திரைகளுடன் இளைஞர் அதிரடி கைது

தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; போதை மாத்திரைகளுடன் இளைஞர் அதிரடி கைது

மட்டக்களப்பு மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் திங்கட்கிழமை (03) மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, மருத்துவப் பரிந்துரைகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த 32 வயதுடைய சந்தேக நபரும் அதே இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"