BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் வெளிநாடு சென்றதாக தகவல்; சமூக வலைத்தள பதிவால் பரபரப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் வெளிநாடு சென்றதாக தகவல்; சமூக வலைத்தள பதிவால் பரபரப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும், அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவி அண்மையில் வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தஹாம் சிறிசேனவின் மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது மனைவியின் குடும்பத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் எல்காடோ (Elcardo) நிறுவனம், ஆரம்பத்தில் நுழைவாயில்கள் தயாரிக்கும் நிறுவனமாக இயங்கி பின்னர் வாகன இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டதாகவும், அந்த நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ தரப்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"