BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

எல் நினோ தாக்கம் தீவிரம்; அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு வறட்சி மற்றும் உயர் வெப்பநிலை அபாயம்

எல் நினோ தாக்கம் தீவிரம்; அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு வறட்சி மற்றும் உயர் வெப்பநிலை அபாயம்

எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களில் இலங்கையில் எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எல் நினோவின் தாக்கத்தால் நாட்டில் வறண்ட காலநிலை தீவிரமடையக்கூடும் என்றும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் அசாதாரண காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எல் நினோ நிகழ்வு, இம்முறை இலங்கையின் விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, உயர் வெப்பநிலை மற்றும் நீடித்த வறட்சி காரணமாக பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்படலாம் என்பதால், விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் விவசாயத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது மிகவும் அவசியம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"