BREAKING
ஆந்திராவிலும் பாமக தொடக்கம்; 2031-ல் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வாய்ப்பு தருவதாக கூறி “அட்ஜெஸ்ட்மென்ட்” கேட்டார்கள்; அய்யனார் துணை நடிகை ரேஷ்மா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தினமும் எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? 7 நாட்களில் ரூ.245 கோடியை கடந்த ஜனநாயகன் வசூல்; 7வது நாளில் கணிசமான சரிவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆந்திராவிலும் பாமக தொடக்கம்; 2031-ல் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வாய்ப்பு தருவதாக கூறி “அட்ஜெஸ்ட்மென்ட்” கேட்டார்கள்; அய்யனார் துணை நடிகை ரேஷ்மா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தினமும் எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? 7 நாட்களில் ரூ.245 கோடியை கடந்த ஜனநாயகன் வசூல்; 7வது நாளில் கணிசமான சரிவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

நெல் விற்க காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஆம் திகதி முதல் நெற்கொள்வனவு ஆரம்பம்

நெல் விற்க காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஆம் திகதி முதல் நெற்கொள்வனவு ஆரம்பம்

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவு, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வன்னி மாவட்டம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் கே.டீ. லால்காந்த,

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என உறுதிப்படுத்தினார்.

இந்த அறிவிப்பு,

நெல் விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக,

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பின்னர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"