BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற வயது இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற வயது இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய, தெலுல்ல பகுதியில் அமைந்துள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் தெரிவித்ததன்படி, ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக பல பௌத்த பிக்குகள் அங்கு வருகை தந்திருந்தனர்.

நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் சிலர் கிரிந்தி ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர். அப்போது, நீராடிக்கொண்டிருந்த 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

சம்பவத்தை அவதானித்த பிரதேச மக்கள் உடனடியாக அவரை மீட்டு தணமல்வில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பௌத்த பிக்கு என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவத்தின் காரணங்கள் தொடர்பில் ஊவா குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"