தம்புள்ள – ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 9 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுமிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது சாரதி உட்பட மொத்தம் 10 பேர் குறித்த வாகனத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூவர் மற்றும் மூன்று சிறுமிகள் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 9 மாத பெண் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். விபத்திற்கான காரணம், வாகனத்தின் வேகம் மற்றும் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக