BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

கணவர் ரவீந்தருக்கு மகாலட்சுமி கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்; உருக்கமான காதல் பதிவு வைரல்

கணவர் ரவீந்தருக்கு மகாலட்சுமி கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்; உருக்கமான காதல் பதிவு வைரல்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் பிறந்தநாளை அவரது மனைவியும் பிரபல சின்னத்திரை நடிகையுமான மகாலட்சுமி குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும், கணவருக்காக எழுதிய உருக்கமான வாழ்த்து பதிவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அவை ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று வைரலாகி வருகின்றன.

தொகுப்பாளினியாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய மகாலட்சுமி, பின்னர் சின்னத்திரை நடிகையாக பல வெற்றிகரமான தொடர்களில் நடித்தார். குறிப்பாக வில்லி கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். நடிப்புடன் இணைந்து தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டு வரும் அவர், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டாலும், இருவரும் அதனை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

ரவீந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, மகன் உட்பட குடும்பத்தினருடன் இணைந்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த மகாலட்சுமி, தனது கணவருக்கு உணர்வுபூர்வமான வாழ்த்து செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் என் கணவர் மட்டுமல்ல; என் பலம், என் அமைதி, என் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு காரணமானவர். வாழ்க்கை எங்கு அழைத்துச் சென்றாலும், உங்கள் பக்கத்தில் நானிருப்பேன். உங்கள் வெற்றிகளை கொண்டாடுவேன்; ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் கையைப் பிடித்தே பயணிப்பேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் உங்களை நேசிக்கிறேன்" என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், புதிய வயதில் ரவீந்தருக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பலரும் தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரவீந்தர் – மகாலட்சுமி தம்பதியரின் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும், அவர்களுக்கிடையேயான அன்பை வெளிப்படுத்தும் பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"