BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

கச்சத்தீவு இலங்கையின் சொத்து; தமிழக முதல்வர் விஜய்க்கு யாழ் மீனவர்கள் கடும் எச்சரிக்கை

கச்சத்தீவு இலங்கையின் சொத்து; தமிழக முதல்வர் விஜய்க்கு யாழ் மீனவர்கள் கடும் எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் பிரதிநிதிகள், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், கச்சத்தீவு சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கைக்கு சொந்தமான பகுதி என்பதால், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தொடர வேண்டாம் என வலியுறுத்தினர். இதனை அரசியல் நோக்கத்திற்காக மீண்டும் பேசுவது இரு நாடுகளின் மீனவர் சமூகங்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், கடல் வளங்கள் சேதமடைவதுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகளும் அழிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், எல்லை மீறி மீன்பிடிப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் அரசியல் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கப்பட்டால், வடக்கு மீனவர்கள் சார்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"