BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது வேலைவாய்ப்பு ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல் ; 2 நாட்கள் விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை யாழ் வலி.வடக்கில் வேகமெடுக்கும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ; மக்கள் அதிருப்தி

: பதிவின் பின்னணி என்ன? த்ரிஷா பதிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் விளக்கங்கள்

: பதிவின் பின்னணி என்ன? த்ரிஷா பதிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் விளக்கங்கள்

நடிகை த்ரிஷா மற்றும் தமிழக முதல்வர் விஜய் தொடர்பான சமூக வலைத்தள விவாதங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், விஜயின் 52ஆவது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா வெளியிட்ட “00:00” என்ற பதிவு தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த த்ரிஷா, அதில் “00:00” என்ற நேரக் குறியீட்டையும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளக்கங்கள் மற்றும் கருத்துக்கள் பரவத் தொடங்கின.

சிலர் இதை சாதாரண நேரக் குறியீடாகக் கருதினாலும், மற்றொரு தரப்பினர் இதனை “ஆழமான அர்த்தம் கொண்ட குறியீடு” என விளக்குகின்றனர். குறிப்பாக ஆன்மீகம் மற்றும் “Law of Attraction” எனப்படும் ஈர்ப்பு விதி நம்பிக்கைகளின் அடிப்படையில், “00:00” என்பது “Angel Number” ஆக கருதப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நம்பிக்கையின் படி, “00:00” என்பது பழைய கட்டங்கள் முடிவடைந்து புதிய தொடக்கம் ஏற்படுகிறது, வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன மற்றும் நேர்மறை மாற்றங்கள் நிகழவுள்ளன என்பதைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, த்ரிஷா தனது பதிவின் மூலம் புதிய தொடக்கம் அல்லது முக்கியமான மாற்றத்தை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இந்த விவகாரம் குறித்து த்ரிஷா தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. இதனால், இந்த பதிவு குறித்த விவாதங்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"