BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

திருகோணமலையில் புதையல் தோண்ட முயன்றதாக சந்தேகிக்கப்படும் பேர் கைது

திருகோணமலையில் புதையல் தோண்ட முயன்றதாக சந்தேகிக்கப்படும் பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று – இலங்கைத்துறை முகத்துவாரம் சந்திப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படும் எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (23) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து புதையல்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் நவீன ஸ்கேன் இயந்திரம், ஒரு வேன் வாகனம் மற்றும் அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத புதையல் அகழ்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"