BREAKING
6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல் இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை 6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல் இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முன்னுரிமை அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முன்னுரிமை அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண அரசாங்கம் உறுதியளித்துள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் துயரங்களும் சவால்களும் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த உறுதி வழங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தருதல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் வெறும் புள்ளிவிபரங்களோ அல்லது எண்ணிக்கைகளோ அல்ல என்றும், அவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக மனவேதனையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,452 பேர் காணாமல் போனதாக பதிவாகியுள்ளதுடன், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் மூலம் உண்மை வெளிக்கொணரல், நீதி நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"