வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நடவடிக்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, இலஞ்சச் சட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொதுச் சேவைகள் ஆணைக்குழு அவரை பதவியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக