BREAKING
6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல் இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை 6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல் இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

திருகோணமலை கன் சைட் இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை

திருகோணமலை கன் சைட் இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை

திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள ‘கன் சைட்’ (Gun Site) என அழைக்கப்படும் இரகசிய நிலத்தடி தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), குறித்த முகாம் வளாகத்தை அதிகாரப்பூர்வமாக சீல் வைத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

பல ஆண்டுகளாக மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட இந்த முகாமில், சுமார் 60 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதிவான் எதிர்வரும் வியாழக்கிழமை (18) குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று உத்தியோகபூர்வ பரிசோதனை நடத்தவுள்ளார். நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு, முகாமின் உண்மை நிலைமை மற்றும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘கன் சைட்’ தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகள் நாட்டின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளதுடன், போர்க்கால மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கட்டாயக் காணாமற்போகல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள் மற்றும் சித்திரவதை சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் நீதிமன்ற ஆய்வின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என சட்ட மற்றும் மனித உரிமை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"