BREAKING
அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள் அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி கட்டாயம்; விதிமுறையை மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி கட்டாயம்; விதிமுறையை மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஆசனப் பட்டி அணியாமல் செல்லும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ், வாகனங்களில் முன் இருக்கைகளுடன் பின்னிருக்கைகளிலும் ஆசனப் பட்டி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

கால அவகாசம் முடிவடைந்த பின்னர், அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது வாகனங்களில் பின்னிருக்கைகளுக்கான ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதுடன், பயணிகள் அவற்றை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், விபத்துக்களின் போது ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனைத்து வாகன உரிமையாளர்களும் புதிய விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"